Friday, 21 December 2018

கலைஞனின் கைவண்ணம்



பழுக்கச்செய்து   பந்திவிரிக்கும் 

பழக்காரனைவிட ...

பறித்துத்தரும்  விவசாயி வசம்  இருக்கிறது....

கலைஞனின் கைவண்ணம்



அக அழகை  மட்டுமே 

அணு அணுவாய் ஆராதிக்கும்

" அம்மா" வின் மனதில் இருக்கிறது......

கலைஞனின் கைவண்ணம்.


                                          எது புருவம் உயர்த்தச் செய்ததோ 
                                          இதழ் கடையில் புன்னகை  தந்ததோ 
                                           விழியோரம் பனிநீர் துளிர்க்கச் செய்ததோ 
                                          அங்கு நீ கண்டதுதான் 

                                           கலைஞனின் கைவண்ணம்
கலைஞனின் கைவண்ணம்


நீ சமைக்கும் உணவில் இல்லை.......

பசிப்பவனுக்கு நேரத்தில் வழங்கும் 

     சிறு ரொட்டித்துண்டில்  இருக்கிறது.......